ஒரு மோசமான பெண்ணிடம் சிக்கி சீரழிந்த நீதி,நேர்மை, நியாயம் கொண்ட ,இறைபக்தி நிரம்பிய வாலிபனின் கதையிது. இந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. கதையில் வரும் நாடும் ஊரும்- லாண்டியா தேசம்- வென்னை மாகாணம்- ஆல் நொந்த ஊர்,ஆல் நொந்த பாக்கம்,பூ நொந்த மல்லி,நரி நின்ற ஊர் மறறும் நொந்தல் பட்டு வஞ்சகபுரம் ஆகியன. கதாநாயகனின் பெயர் கோமணச்சாமி. ஆம் அவனிடம் மிஞ்சியது கோவணம் மட்டுமே அதான் அந்த பெயர். கதாநாயகியின் பெயர் நச்சுமாலா. நச்சுமாலாவும் அவர் குடும்பத்தார் செய்த கொடுமைகளும், அந்த நாட்டில் இருக்கும் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் செய்த துரோகங்களும் , கதா நாயகனின் சொந்த பந்தங்கள் செய்த துரோகங்களும், சமுதாயம் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோர் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோரின் வாழ்க்கை துணைவர்கள் செய்த துரோகங்களும் என பல இக்கதையில் வரும் சம்பவங்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஊர்களும், பெயர்களும், அனைத்து சம்பவங்களும் கற்பனையே. இங்கு குறிப்பிடப்படும் விஷயங்கள் அனைத்துமே லாண்டியா தேசத்தில் நடக்கும் கற்பனைச் சம்பவங்கள். இவைகளை இந்தியாவில் நடக்கும் சம்பவங்களோடு ஒ்ப்பிட்டு பார்க்க வேண்டாம். இனி கதை படிக்க இங்கே கிளிக் பண்ணி கீழே பார்க்கவும்

Saturday, 29 November 2014

துரத்தும் துரோகம், தொடரும் துரோகம்,ஊழ்வினை

இந்த உலகில் வறுமையை சந்திக்காத மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். நோயை சந்திக்காத மனிதர்கள் இருக்கலாம். ஏன் பிரச்னைகள் என்பதையே சந்திக்காத மனிதர்கள் கூட இருக்கலாம். ஆனால் துரோகத்தை சந்திக்காத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்தை சந்திக்கின்றனர். உயிர் போகும் வலியை கூட சில நேரம் தாங்கிக்கொள்ள இயலும். ஆனால் துரோகத்தை தாங்கி கொள்ளும் சக்தி மட்டும் இந்த உலகில் எவருக்கும் இருக்க முடியாது. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் கூட சமயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை தாங்க முடியாது கலங்கிவிடுகின்றனர். ஏன் தெரியுமா? மற்ற விஷயங்களில் அறிந்தோ அறியாமலோ நமது பங்கு இருக்கும். ஆனால் துரோகத்தில் பெரும்பாலும் அதை நமக்கு இழைப்பவர் பங்கு மட்டுமே இருக்கும். எனவே துரோகத்தை தாங்கும் சக்தி மட்டும் எவருக்கும் இருப்பதில்லை.

கணவன் மனைவிக்கு செய்யும் துரோகம்,மனைவி கணவனுக்கு செய்யும் துரோகம்,நண்பனின் துரோகம்,பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம்.
பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் துரோகம்,ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தங்களுக்குள் செய்யும் துரோகம்.
ஆசிரியருக்கு மாணவன் இழைக்கும் துரோகம்,காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் இழைக்கும் துரோகம் இப்படி துரோகங்களையும் அதன் வகைகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். என்னை பொருத்தவரை வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம். ஆனால் என் முதுகில் குத்தியவர்களை மட்டும் எண்ணவே முடியாது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் துரோகங்களையே கேடயமாக்கி கொள்ள பழகிக்கொண்டு  விட்டேன். என் முன்னேற்றத்திற்கு அவற்றை தான் படிக்கற்களாக பயன்படுத்தினேன். இந்த கோட்டையின் படிக்கட்டுக்கள் துரோகங்களினாலும் அவமதிப்புக்களினாலும் கட்டப்பட்டது என்றால் மிகையாகாது. நான் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்த – கனவில் கூட எனக்கு துரோகம் இழைப்பார்கள் என்று நினைக்காதவர்களெல்லாம் – எனக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என் ஊழ்வினையை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

No comments:

Post a Comment