சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராசு (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. ஆதம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், கோயம்பேடு, அடையார், திருவான்மியூர், கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், சைதாப்பேட்டை, திநகர், கோடம்பாக்கம், திருநின்றவூர்,பூந்தமல்லி ஆகியன சென்னை மற்றும் அதன் அருகில் இருப்பன.
ஒரு மோசமான பெண்ணிடம் சிக்கி சீரழிந்த நீதி,நேர்மை, நியாயம் கொண்ட ,இறைபக்தி நிரம்பிய வாலிபனின் கதையிது. இந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. கதையில் வரும் நாடும் ஊரும்- லாண்டியா தேசம்- வென்னை மாகாணம்- ஆல் நொந்த ஊர்,ஆல் நொந்த பாக்கம்,பூ நொந்த மல்லி,நரி நின்ற ஊர் மறறும் நொந்தல் பட்டு வஞ்சகபுரம் ஆகியன. கதாநாயகனின் பெயர் கோமணச்சாமி. ஆம் அவனிடம் மிஞ்சியது கோவணம் மட்டுமே அதான் அந்த பெயர். கதாநாயகியின் பெயர் நச்சுமாலா. நச்சுமாலாவும் அவர் குடும்பத்தார் செய்த கொடுமைகளும், அந்த நாட்டில் இருக்கும் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் செய்த துரோகங்களும் , கதா நாயகனின் சொந்த பந்தங்கள் செய்த துரோகங்களும், சமுதாயம் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோர் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோரின் வாழ்க்கை துணைவர்கள் செய்த துரோகங்களும் என பல இக்கதையில் வரும் சம்பவங்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஊர்களும், பெயர்களும், அனைத்து சம்பவங்களும் கற்பனையே. இங்கு குறிப்பிடப்படும் விஷயங்கள் அனைத்துமே லாண்டியா தேசத்தில் நடக்கும் கற்பனைச் சம்பவங்கள். இவைகளை இந்தியாவில் நடக்கும் சம்பவங்களோடு ஒ்ப்பிட்டு பார்க்க வேண்டாம். இனி கதை படிக்க இங்கே கிளிக் பண்ணி கீழே பார்க்கவும்
No comments:
Post a Comment