மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது அடியாட்களை அழைத்துவந்து கொடூர தாக்குதல்!
சென்னை: வகுப்பறையில் மாணவனை கண்டித்ததற்காக, அடியாட்களை அழைத்து வந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம்த்தில் இயங்கி வருகிறது லயோலா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி. இங்கு பாஸ்கர் என்பவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அர்னால்டு என்ற மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவனுடன் அரட்டை அடித்தபடி விசில் அடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதை கவனித்த பாஸ்கரன் அந்த மாணவனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
சிறிது நேரத்தில் உடல்நிலை சரியில்லை எனக் கூறி மாணவன் அர்னால்டு பள்ளியிலிருந்து வெளியேறியிருக்கிறான். இதையடுத்து பிற்பகலில் வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு வந்த 3 நபர்கள் ஆசிரியர் பாஸ்கரை பார்க்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். பாஸ்கர் வந்ததும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போது வெளியிலிருந்து 10க்கும் மேற்பட்டோர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் பாஸ்கரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பாஸ்கர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

No comments:
Post a Comment