ஒரு மோசமான பெண்ணிடம் சிக்கி சீரழிந்த நீதி,நேர்மை, நியாயம் கொண்ட ,இறைபக்தி நிரம்பிய வாலிபனின் கதையிது. இந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. கதையில் வரும் நாடும் ஊரும்- லாண்டியா தேசம்- வென்னை மாகாணம்- ஆல் நொந்த ஊர்,ஆல் நொந்த பாக்கம்,பூ நொந்த மல்லி,நரி நின்ற ஊர் மறறும் நொந்தல் பட்டு வஞ்சகபுரம் ஆகியன. கதாநாயகனின் பெயர் கோமணச்சாமி. ஆம் அவனிடம் மிஞ்சியது கோவணம் மட்டுமே அதான் அந்த பெயர். கதாநாயகியின் பெயர் நச்சுமாலா. நச்சுமாலாவும் அவர் குடும்பத்தார் செய்த கொடுமைகளும், அந்த நாட்டில் இருக்கும் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் செய்த துரோகங்களும் , கதா நாயகனின் சொந்த பந்தங்கள் செய்த துரோகங்களும், சமுதாயம் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோர் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோரின் வாழ்க்கை துணைவர்கள் செய்த துரோகங்களும் என பல இக்கதையில் வரும் சம்பவங்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஊர்களும், பெயர்களும், அனைத்து சம்பவங்களும் கற்பனையே. இங்கு குறிப்பிடப்படும் விஷயங்கள் அனைத்துமே லாண்டியா தேசத்தில் நடக்கும் கற்பனைச் சம்பவங்கள். இவைகளை இந்தியாவில் நடக்கும் சம்பவங்களோடு ஒ்ப்பிட்டு பார்க்க வேண்டாம். இனி கதை படிக்க இங்கே கிளிக் பண்ணி கீழே பார்க்கவும்

Saturday, 22 November 2014

இந்தியா

இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன

No comments:

Post a Comment