ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
இந்த இரண்டு வரிகளில் ஈராயிரம் அர்த்தங்கள் உண்டு.முள்ளோடு மோதி வாழும் ரோஜா போராட வில்லையா? மலர்ந்த மலரில் வண்டுகள் ருசிபார்க்கவில்லையா?
மலர்ந்தும் மலர், உதிர்ந்தும் வாடுவதில்லையா? எத்தனையோ பேராட்டங்களுக்கு நடுவே மலர்கள் சிரிக்கின்ற போது நீ ஏன் சோர்ந்து வாட வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
இந்த வரிகள் இரவு இரவாகவே, இருட்டாகவே இருப்பதில்லை நிச்சயம், பகல் வரும் அது போல துன்ப வாழ்க்கை துன்பமாகவே தொடர்ந்து விடாது,துன்ப இருள் நீக்கி இன்ப ஒளி வரும் என்று உணர்த்துகின்றது.
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
இலட்சிய வீரனுக்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். அறிவியல் புயல் அப்துல் கலாம் சொல்வார்கள்.உன்னால் முடியும் வரை முற்சிப்பது முயற்சி அல்ல
எண்ணிய செயல் முடியும் வரை முயற்சிப்பதே முயற்சி அது போல வென்றே தீருவேன் என்ற வெறி , நெருப்புப் பொறியாய் மனதில் நிலையாய் இருக்க வேண்டும்.
மனமே ஓ! மனமே நீ மாறிவிடு
மலையோ? அது பனியோ? நீ மோதி விடு
மனம் நமக்கு வெற்றி கிடைக்காது. நம்மால் முடியாது என்று சொல்லும் அந்த எதிர்மறை மனமே மாறி விடு. மலையாக இருந்தாலும் மோதிப் பார்க்கலாம்.
பனியாக இருந்தாலும் தொட்டுப் பார்க்கலாம். மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
பல தோல்வியாளர்களிடம் காரணம் கேட்டுப் பாருங்கள் உள்ளம் உடைந்து விட்டது.என்று தான் சொல்வார்கள்.என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது தோல்விக்கு துவளாத உள்ளம் வேண்டும். எப்படியும் சாதிப்பேன் என்ற உறுதி வேண்டும் என்று உணர்த்துகின்ற உணர்ச்சிமிக்க வரிகள். உள்ளம் உடைந்து விட்டால் வாழ்க்கை உடைந்து வட்டால் வாழ்க்கை உடைந்து விடும். உள்ளம் உடையாமல் காப்பது உயர்ந்த தன்னம்பிக்கை.
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது
பலர் எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது. என்ன வாழ்க்கை இது என்று புலம்பக் கேட்டு இருக்கின்றோம்.அவர்களது ரணங்களுக்கு மருந்தினை மயிலிறகால் மருந்து போடும் வைர வரிகள் இவை. வாழ்க்கையை ரசிக்க வேண்டும்.
படம் : ஆட்டோகிராப்
இசை : பரத்வாஜ்
பாடியோர் : சித்ரா
பல்லவி
ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே..
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே
சொல்கிறதே..
இரவானால் பகலொன்று
வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாளில்!
மனமே ஓ..
மனமே நீ மாறிவிடு
மலையோ அது
பனியோ நீ மோதி விடு
சரணம் 1
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயம் எல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்.
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
சரணம் 2
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்பேம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி
விதைபோடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

No comments:
Post a Comment