இந்த உலகில் வறுமையை சந்திக்காத மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். நோயை சந்திக்காத மனிதர்கள் இருக்கலாம். ஏன் பிரச்னைகள் என்பதையே சந்திக்காத மனிதர்கள் கூட இருக்கலாம். ஆனால் துரோகத்தை சந்திக்காத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்தை சந்திக்கின்றனர். உயிர் போகும் வலியை கூட சில நேரம் தாங்கிக்கொள்ள இயலும். ஆனால் துரோகத்தை தாங்கி கொள்ளும் சக்தி மட்டும் இந்த உலகில் எவருக்கும் இருக்க முடியாது. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் கூட சமயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை தாங்க முடியாது கலங்கிவிடுகின்றனர். ஏன் தெரியுமா? மற்ற விஷயங்களில் அறிந்தோ அறியாமலோ நமது பங்கு இருக்கும். ஆனால் துரோகத்தில் பெரும்பாலும் அதை நமக்கு இழைப்பவர் பங்கு மட்டுமே இருக்கும். எனவே துரோகத்தை தாங்கும் சக்தி மட்டும் எவருக்கும் இருப்பதில்லை.
கணவன் மனைவிக்கு செய்யும் துரோகம்,மனைவி கணவனுக்கு செய்யும் துரோகம்,நண்பனின் துரோகம்,பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம்.
பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் துரோகம்,ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தங்களுக்குள் செய்யும் துரோகம்.
ஆசிரியருக்கு மாணவன் இழைக்கும் துரோகம்,காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் இழைக்கும் துரோகம் இப்படி துரோகங்களையும் அதன் வகைகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். என்னை பொருத்தவரை வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம். ஆனால் என் முதுகில் குத்தியவர்களை மட்டும் எண்ணவே முடியாது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் துரோகங்களையே கேடயமாக்கி கொள்ள பழகிக்கொண்டு விட்டேன். என் முன்னேற்றத்திற்கு அவற்றை தான் படிக்கற்களாக பயன்படுத்தினேன். இந்த கோட்டையின் படிக்கட்டுக்கள் துரோகங்களினாலும் அவமதிப்புக்களினாலும் கட்டப்பட்டது என்றால் மிகையாகாது. நான் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்த – கனவில் கூட எனக்கு துரோகம் இழைப்பார்கள் என்று நினைக்காதவர்களெல்லாம் – எனக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என் ஊழ்வினையை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?